Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் குத்துப்பாட்டுக்கு நடனம்.. மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்த நீதிபதி..!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (08:02 IST)
பள்ளி வகுப்பறையில் குத்து பாட்டுக்கு நடனமாடி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை தகாத முறையில் நடத்திய மாணவர்களுக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளார். 
 
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் விடுதியில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியதோடு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. 
 
இதுகுறித்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அனைத்து மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் முன் ஆஜராகி ஆயிரம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் 
 
மேலும் ஒரு வாரம் பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும்  மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கை பற்றி, காமராஜர் துவங்கிய கல்வி திட்டங்கள் பற்றி, அப்துல் கலாம் கனவு மற்றும் திட்டம் பற்றி கட்டுரைகள் எழுத வேண்டும்  என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments