அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று முக்கிய முடிவு

Siva
திங்கள், 8 ஜனவரி 2024 (07:41 IST)
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் விசாரணை செய்ய இருக்கும் நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி ஆகிய அமைச்சர்களும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியவர்கள் மாவட்ட அளவில் சிறப்பு போட்டிகளில் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

 இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில்  சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாகவே முன்வந்து விசாரணை செய்து தீர்ப்பையும் அளித்தார்.

இந்த நிலையில் மூன்று அமைச்சர்கள் மற்றும் மூன்று முன்னாள் அமைச்சர் அமைச்சர்களுக்கு எதிராக  உள்ள வழக்குகளும் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் இன்று ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகள் குறித்து விசாரணை குறித்த முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.  இந்த வழக்குகளை விசாரணைக்காக எந்தெந்த நாட்களில் விசாரணைக்கு எடுக்கலாம் என்பது குறித்து அறிவிப்பு இன்று வெளிவர வாய்ப்பு உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments