Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி கைது: செய்தியாளர்கள் மீது கல்வீசி தாக்குதல்

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2015 (12:41 IST)
தேமுதிகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி செய்தியாளர்களைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.



 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை இழிவு படுத்தியதாகக் கூறி, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற செய்தியாளர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இந்த தாக்குதலில் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் அன்பரசன் உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், எம்.எல்.ஏ பார்த்தசாரதி உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வடபழனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவை கேள்வி பேட்க செய்தியாளர்களுக்குத் துணிவில்லை என்று கூறி "தூ" வெனத் துப்பினார்.
 
இதனால், விஜயகாந்த் செய்தியாளர்களை இழிவு படுத்தியதாகக் கூறி, அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று செய்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் ஓர் கண்ணோட்டம் 'கிளிக்' செய்து படிக்கவும்.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!