Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

Siva
ஞாயிறு, 1 ஜூன் 2025 (11:12 IST)
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அதிமுக மற்றும் திமுக கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகள் மட்டுமே வெற்றி பெறும் என்றும், விஜய் தலைமையிலான ஒரு கூட்டணி அமைந்தால் அது கண்டிப்பாக இன்னொரு மக்கள் நலக் கூட்டணி போலத்தான் இருக்கும் என்றும் பத்திரிகையாளர் மணி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது என்றும், அங்கு வேறு புதிய கட்சிகள் இணைய வாய்ப்பே இல்லை என்றும் கூறிய பத்திரிகையாளர் மணி, தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைவதை தவிர வேறு ஆப்சனே இல்லை என்றும் அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
 
விஜய் தலைமையிலான கூட்டணிக்கோ, சீமான் தலைமையிலான கூட்டணிக்கோ, அல்லது தனித்து நின்றாலோ, இந்த இரு கட்சிகளும் டெபாசிட் கூட பெற முடியாது என்றும்; அதே நேரத்தில், விஜய்யுடன் கூட்டணி வைத்தாலும் கூட அது ஒரு மக்கள் நலக் கூட்டணி போலத்தான் இருக்கும் என்பதைத் தவிர, வெற்றிபெறும் கூட்டணியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
 
எனவே, பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளுக்கும், அதிமுகவைக் தவிர வேறு வழியே இல்லை என்றும், அவர்கள் கொடுக்கும் சீட்டை வாங்கிக்கொண்டு தேர்தலில் நிற்பது தான் அந்தக் கட்சிக்கு நல்லது என்றும் அவர் கூறினார்.
 
அவரது இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments