காலை மிதிக்கவும் மாட்டோம்… மிதித்தால் விடவும் மாட்டோம் – கூட்டணி குறித்து ஜெயக்குமார்!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (19:40 IST)
பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணி குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இப்போது அது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி அவர்கள் பாஜக தலைமையில் தான் கூட்டணி என்று கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. தமிழக பாஜக தலைவர் 60 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிடும் என்றும் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் எனவும் சொல்லி இருந்தார்.

இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிக்கையாளர்கள் இடையே பேசியபோது பதிலளித்துள்ளார். அதில் ‘நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிக்கிறோம். அமைச்சர்கள் யாரும் பேசக் கூடாது என்று பாஜகவினர் சொல்வது வருத்தற்குரிய விஷயம். அப்படி அவர்கள் நம்மிடம் பேச முடியாது.

எம் ஜி ஆரும் அம்மாவும் கற்றுக் கொடுத்தபடி நாம் யார் காலையும் மிதிக்க மாட்டோம். நம் காலை யாராவது மிதித்தால் சும்மாவும் இருக்க மாட்டோம்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments