Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதகையில் நாளை நடைபெற இருந்த ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து; என்ன காரணம்?

Mahendran
திங்கள், 15 ஏப்ரல் 2024 (13:33 IST)
ஊட்டியில் நாளை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்து கொள்ள இருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பாஜக சார்பில் சில நகரங்களில் ரோடு ஷோ நடத்தப்பட்டு வருகிறது என்பதும் சில இடங்களில் ரோடு ஷோ செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் காரைக்குடியில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்த இருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது பாஜக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக நாளை ஊட்டியில் நடைபெற இருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இந்த ரோடு ஷோவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு மற்றொரு முக்கிய பணி இருப்பதாகவும் அதனால் இந்த ரோடு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments