Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நாங்கள் மன்னார்குடி மாஃபியாதான்! என்ன செய்ய போறீங்க

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (22:29 IST)
சசிகலா குடும்பத்தினர்களை பெரும்பாலான தமிழக மக்களும், அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சிகளும் மன்னார்குடி மாஃபியா என்றே அழைத்து வருகின்றனர். இதற்கு இதுவரை சசிகலா உள்பட யாருமே பதில் சொல்லாத நிலையில் தற்போது  சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் இதுகுறித்து கூறியபோது, 'திமுக எனும் மாபியா கும்பலுடன் மோத வேண்டிய தேவை இருப்பதால், தங்களை மன்னார்குடி மாபியா கும்பல் என்று அழைப்பது சரிதான்' என்று தெரிவித்துள்ளார்.



 


சமீபத்தில் ஜெயானந்த் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாதான். அதில் எந்த மாற்றமும் இல்லை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்கள் அணியில் தான் இருக்கிறார். மேலும் கட்சியின் தலைமை அலுவலகச் செயலாளரும் அவர்தான்.

இன்றும் அதிமுக கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான்  உள்ளது. அதிமுகவில் நான் உறுப்பினராக உள்ளேன். தீவிர அரசியலில் நேரடியாக களமிறங்க உரிய நேரத்திற்காக காத்திருக்கின்றேன். அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கான சாத்தியம் இனி இல்லை. ஓ.பன்னீர்செல்வம் ஏன் அப்படிச் செய்தார் என்பது எங்களுக்கு புரியவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் சசிகலாவுக்கு மட்டுமே முழுமையாக தெரியும். போயஸ் தோட்டம் சசிகலா கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.  தீபாவிற்கோ, தீபக்கிற்கோ அந்த சொத்தில் எந்தவித தொடர்பும் இல்லை. இவ்வாறு ஜெயானந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments