Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல்: பிரவீன்குமார் தகவல்

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2014 (13:34 IST)
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் தானாகவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேர்ந்தது. இதனால் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் காலியாக உள்ள தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்  ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
 
மேலும் அவர், “தமிழகத்தில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தத்திற்கு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்“ என்றும் தெரிவித்தார்.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments