சசிகலா புஷ்பாவின் பேச்சால் மாநிலங்களவையில் கடும் அமளி நிலவி வருகிறது. தனக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதால் பாதுகாப்பு வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக எம்.பி.திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த விவகாரத்தையொட்டி அதிமுக தலைமை சசிகலா புஷ்பாவை அழைத்து விளக்கம் கேட்டது.
இதனையடுத்து இன்று மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, கட்சி தலைவரால் நான் துன்புறுத்தப்பட்டேன் எனவும், அவர் என்னை கன்னத்தில் அறைந்தார் எனவும் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
மேலும், எம்.பி. பதவி கொடுத்த கட்சி தலைவருக்கு நன்றி கூறினார். கணவர், குழந்தைகளுடன் பேச என்னை அனுமதிக்கவில்லை. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கண்ணீர் மல்க கூறியவர் பாதுகாப்பு வேண்டி கோரிக்க விடுத்துள்ளார்.
எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்துகிறார்கள். ஆனால் எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் ராஜினாமா செய்ய போவதில்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சசிகலா புஷ்பாவின் இந்த பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.