Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (15:52 IST)
தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்காக முதல்வர் ஜெயலலிதா மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


 
 
தமிழக அரசியல் களத்தில் அதிமுகவும், திமுகவும் எதிரும் புதிருமான கட்சிகள். தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இது தமிழக அரசியல் அரங்கில் சிறந்த முன் உதாரணமாக பேசப்பட்டது.
 
மேலும், பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காதது குறித்து சர்ச்சையும் உருவாக்கியது. தொலைக்காட்சிகளில் நேற்று இது விவாத பொருளாகவும் மாறியது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
விதிகளை தளர்த்தி மு.க.ஸ்டாலினுக்கு முன் வரிசையில் அமர இடம் ஒதுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரியிருந்ததாகவும் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments