Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஜெயலலிதா உத்தரவு

Webdunia
சனி, 19 ஜூலை 2014 (18:15 IST)
முதல் போக சாகுபடிக்காக, 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் முதல் போகப் பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் உள்ள நிலங்களுக்கு முதல் போக சாகுபடிக்காக 21.7.2014 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
 
இதனால், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை நீக்க உங்களுக்கு அதிகாரமில்ல.. ராமதாஸ் அய்யா சொல்லட்டும்! - எம்.எல்.ஏ அருள் பதிலடி!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்குப்பதிவு.. பாஜக கண்டனம்..!

தமிழகத்தில் ஜூலை 8ஆம் தேதி வரை மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

பிளஸ் 1 மாணவனை மாத்திரை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

இது எங்க இடம் தான்.. ராணுவத்திற்கு சொந்தமான விமான ஓடுதளத்தை விற்ற தாய்-மகன்..!

Show comments