Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சசிகலா புஷ்பா விவகாரத்தில் ஜெயலலிதா உண்மையை சொல்ல வேண்டும்’ - ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (00:14 IST)
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தெரிவித்த புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா உண்மையை உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து சென்னை விமான நிலையத்தில், சசிகலா புஷ்பா தன்னை முதல்வர் ஜெயலலிதா தாக்கியதாகவும், பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும் தெரிவித்து இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ”அதிமுக எம்.பி., சொன்ன இடம் நடுரோட்டிலோ, முச்சந்தியிலோ நின்று அவர் சொல்லவில்லை, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
குறிப்பாக யார் மீது புகார் தெரிவித்து இருக்கிறார் என்றால், தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா தனது கன்னத்தில் அறைந்தார் என்று வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவித்து பதிவு செய்திருக்கிறார். 
 
இதில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கக்கூடியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆகவே பத்திரிகையாளர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா இருக்கக்கூடிய போயஸ் தோட்டத்திற்கு சென்று, இதுகுறித்த அவரது விளக்கங்களை கேட்டு, உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

வெட்டிங் லோன்.. திருமண கடன் வழங்கும் மேட்ரிமோனியல் இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments