Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா அமைச்சரவையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி?

ஜெயலலிதா அமைச்சரவையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி?
, வெள்ளி, 22 மே 2015 (17:03 IST)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
 
தமிழகத்தின் புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் துறைவாரியாக யார் யார் அமைச்சர்கள் ஆவார்கள் என வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழ்வருமாறு:
 
மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா, முதலமைச்சர்,பொதுத் துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை.
 
தமிழக அமைச்சர்கள் விவரம்:-
 
திரு ஒ .பன்னீர்செல்வம், நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர்தல், பொதுப்பணித் துறை).
 
திரு ஆர்.வைத்திலிங்கம், வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை.
 
திரு எடப்பாடி கே . பழனிசுவாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், வனத்துறை.
 
திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன், மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.
 
திருமதி பி.வளர்மதி, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை.
 
திரு செல்லூர் கே . ராஜு, கூட்டுறவுத் துறை.
 
திருமதி. எஸ். கோகுல இந்திரா, கைத்தறி மற்றும் ஜவுளி துறை.
 
திரு பி .மோகன், ஊரகத் தொழில் துறை.
 
திரு பி .பழனியப்பன், உயர் கல்வித் துறை.
 
திரு ஆர் .காமராஜ், உணவு மற்றும் இந்து சமய அறநிலைத் துறை.
 
திரு எம்.சி. சம்பத், வணிகவரி துறை.
 
திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம், சுற்றுச்சூழல் துறை.
 
திரு டி .பி.பூனாச்சி, காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.
 
திரு பி .வி . ரமணா, பால்வளத் துறை.
 
திரு எஸ். பி . சண்முகநாதன், சுற்றுலாத்துறை.
 
திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி, செய்தி, சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை.
 
திரு டி.கே.எம். சின்னய்யா, கால்நடைப் பராமரிப்புத் துறை.
 
திரு பி.தங்கமணி, தொழில் துறை.
 
திரு. சுந்தர ராஜ், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை.
 
திரு. எஸ்.பி.வேலுமணி, நகராட்சி நிர்வாகம், கிராம மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை.
 
கே .சி .வீரமணி, பள்ளிக்கல்வித் துறை.
 
திரு.சி. விஜய பாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத் துறை.
 
திரு வி . செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை.
 
திரு கே .ஏ. ஜெயபால், மீன்வளத்துறை.
 
முக்கூர் திரு என் .சுப்ரமணியன், தகவல் தொழில்நுட்பத் துறை.
 
திரு. என்.சுப்பிரமணியன், ஆதிதிராவிடார் துறை.
 
திரு. ஆர்.பி.உதயகுமார், வருவாய்த் துறை.
 
எஸ்.அப்துல் ரஹீம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம்.
 
என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இடம்பிடித்த, செந்தூர்பாண்டியன், ஆனந்தன் ஆகியோர் ,ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil