Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கட்டுமானங்கள் - ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கட்டுமானங்கள் - ஜெயலலிதா திறந்து வைத்தார்
, புதன், 9 ஜூலை 2014 (16:21 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா, 8.7.2014 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் சலவைத் தொழிலாளர்கள், சலவைப் பணி செய்வதற்காக 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 18 சலவைக் கூடங்கள் மற்றும் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாக முகப்பு வாயிலையும் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். 

 
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பில் வசிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் அன்றாட சலவைத் தேவைகளை விரைவாகவும், சுலபமாகவும் மேற்கொள்ளும் வகையில், சலவைத் தொழிலாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் கட்டணம் ஏதுமின்றி, ஒவ்வொரு அறையும் 116 சதுர அடி பரப்பளவில், தனித்தனியே தண்ணீர் தொட்டி, நவீன சலவை உபகரணங்களைப் பயன்படுத்த மின்வசதி, தனி மின் அளவீட்டு கருவிகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 18 சலவைக் கூடங்கள்; 
 
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாகனங்கள் சிரமமின்றி குடியிருப்புக்குள் வந்து செல்லும் வகையிலும், குடியிருப்பு வளாகத்தின் முகப்பு பகுதிக்கு எழில் கூட்டும் வகையிலும், 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாக முகப்பு வாயில்; என மொத்தம் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சலவைக் கூடங்கள், புதுப்பிக்கப்பட்ட முகப்பு வாயில் ஆகியவற்றை ஜெயலலிதா, காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.  
 
இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப. தனபால், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), சட்டமன்றப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil