Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா வீட்டு முன்பு நவீன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

ஜெயலலிதா வீட்டு முன்பு நவீன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
, திங்கள், 5 அக்டோபர் 2015 (23:32 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா  வீட்டை சுற்றி உள்ள குப்பைகளை சேகரித்து அகற்ற முயன்ற தமிழர் முன்னேற்ற படை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
 

 
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து ஐந்து நாளாக அவர்களை விடுதலை செய்ய கோரி பட்டிணி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று 5.10.2015,காலை 11.00 மணியளவில் அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்கவும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவணத்திற்கு கொண்டு செல்லவும், தமிழர் முன்னேற்ற படை  நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி தலைமையில், அந்த இயக்க தொண்டர்களுடன் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் இல்லமான சிறுதாவூர் பங்களாவை சுற்றி உள்ள இடத்தில் குப்பைகளை சேகரித்து அகற்ற முயன்றனர்.
 
இதற்கு காவல் துறை அனுமதி தரவில்லை. மேலும், இந்த நவீன போராட்டத்தில் ஈடுபட்ட, அந்த அமைப்பின் தலைவர் கி.வீரலட்சுமி மற்றும் முக்கிய நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil