Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா தோல்வி பயத்தில் மது விலக்கை அறிவித்துள்ளார் - ஜவாஹிருல்லா

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2016 (18:19 IST)
ஜெயலலிதா தோல்வி பயத்தில் மது விலக்கை அறிவித்துள்ளார் என்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
 

 
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஜவாஹிருல்லா, ‘’தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்தகோரி பல போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆட்சியில் இருந்த அதிமுக அரசு சட்டமன்றத்தில் பலமுறை மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அழுத்தமாகவே கூறியது.
 
தமிழக தேர்தலை சந்திக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என கூறுகிறார். இது ஒரு வெற்று நாடக பேச்சு.
 
ஆட்சியில் இருக்கும் போது மது விலக்கை அமல்படுத்தாத ஜெயலலிதா இனி ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலையில் தோல்வி பயத்தில் இப்படி அறிவிக்கிறார். இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். இதை ஏற்று கொள்ள மாட்டார்கள். இத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மது விலக்கை அமல்படுத்தும்’’ என்று கூறியுள்ளார்.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

Show comments