Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு தேர்தல் பயம் வந்த விட்டது: கனிமொழி

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2016 (15:34 IST)
ஜெயலலிதா தேர்தல் பயம் வந்த பிறகு படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன் என கூறுகிறார் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.


 


இது குறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, மக்களின் கோரிக்கை, மாணவர்கள், பெண்களின் போராட்டங்களுக்கு பிறகு கூட மதுவிலக்கு அமல்படுத்த மாட்டேன் என்றார்.
 
தேர்தல் பயம் வந்த பிறகு படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன் என கூறுகிறார். இதை யாரை ஏமாற்ற பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.
 
நிச்சயமாக மக்கள் இதை நம்பத் தயாராக இல்லை. சில்லரை வணிகத்தின் வழியாக அரசாங்கம் மதுவிற்கலாம் என்பதை கொண்டு வந்ததே ஜெயலலிதாதான்.
 
இதனால்தான் மதுக்கடைகள், மது பழக்கம் அதிகரித்தது. இதனால் மதுவிலக்கு பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. இவ்வாறு கனிமொழி கூறினார்.

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

கார்கில் போருக்கு நாங்கள்தான் காரணம் .. உண்மையை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

ஒரு மணி நேரத்தில் 98.4 மி.மீ மழை.. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை..!

Show comments