Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீதியில் இறங்கிய ஜெயலலிதா: ஒரே நாளில் சென்னையில் 15 தொகுதிகளில் பிரச்சாரம்

Webdunia
புதன், 11 மே 2016 (18:14 IST)
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று சென்னையில் உள்ள 15 தொகுதிகளிலும் வீதி வீதியாக வேன் மூலம் சென்று பிரச்சாரம் செய்தார்.


 
 
சென்னையில் ஒரே நாளில் 15 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால் ஜெயலலிதா ஒவ்வொரு தொகுதிகளிலும் சில நிமிடங்களே பேசினார். சேப்பாக்கம் தொகுதியில் முதலில் பிரச்சாரத்தை ஆரம்பித்த ஜெயலலிதா ஓவ்வொரு கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்ற வார்த்தையை மறக்காமல் கூறினார்.
 
மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் வசந்தம் வீசுவதாகவும், வசந்தம் தொடர்ந்திட அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளதாகவும், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ அதிமுகவிற்கு மீண்டும் வாக்களிக்குமாறும் ஜெயலலிதா கூறினார்.
 
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்திற்காக பிற்பகல் 3 மணி அளவில் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவிற்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments