Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மாவுக்கு, எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்து

அம்மாவுக்கு, எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்: பொன்.ராதாகிருஷ்ணன்
, புதன், 24 பிப்ரவரி 2016 (08:53 IST)
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமாக ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–
 
அகவை 68 ஐ அடைந்துள்ள தமிழக முதலமைச்சர் "அம்மா"வுக்கு, எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
 
அன்னை பராசக்தியின் அருளால் தாங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

webdunia

 

 
பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் காலத்திற்கு பின்னால் அவர் உருவாக்கிய அதிமுக வை உருக்குலையாமல் உயர்த்தி எடுத்து அவரது காலத்தில் இருந்ததை விட அதிக வலுவுள்ளதாக மாற்றி தமிழகத்தின் முதலமைச்சராக 3 முறை பொறுப்பு வகித்து சிறப்பு பெற்ற தாங்கள், வாழ்வில் மேலும் சிறப்பு பல பெற அன்னை பராசக்தி தங்களுக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil