விரைவில் ஜெ. டிஸ்சார்ஜ்? : பரபரப்பு தகவல்கள்
விரைவில் ஜெ. டிஸ்சார்ஜ்? : பரபரப்பு தகவல்கள்
உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முதல்வர் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், சளி, நீர்ச்சத்து குறைபாடு, சுவாசப் பிரச்சனை அவருக்கு இருந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது. லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் பின் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதால், மருத்துவமனையிலேயே அவர் தங்கியிருக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் கூறியிருந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக முதல்வரின் உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பீதி கிளம்பியுள்ளது.
இந்நிலையில், வருகிற தீபாவளிக்கு முன், மருத்துவமனையிலிருந்து முதல்வரை போயஸ் கார்டன் வீட்டிற்கு கொண்டு செல்ல சசிகலா தரப்பு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளியன்று அவர் மருத்துவமனையில் இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைப்பதாக தெரிகிறது.
எனவே, அப்பல்லோவில் அளிக்கும் சிகிச்சையை, கார்டன் வீட்டிலேயே தொடர முடியுமா என்பது பற்றி சசிகலா தரப்பு ஆலோசனை செய்து வருவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. வருகிற 27ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்வது நல்லது என்று முதல்வரின் ஆஸ்தான ஜோதிடர்கள் கூறியிருப்பதாக தெரிகிறது. எனவே தீபாவளிக்கு முன்பே அவர் கார்டன் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது.
இந்த செய்தி கேள்விப்பட்டு, முதல்வரின் உடல் நிலை பற்றி தெரிந்து கொள்ள, அப்பல்லோ வளாகத்தில் காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்களாம்...