Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி, மேனகாவிற்கு ஜெயலலிதா நன்றிக் கடிதம்

ரஜினி, மேனகாவிற்கு ஜெயலலிதா நன்றிக் கடிதம்
, திங்கள், 20 அக்டோபர் 2014 (13:37 IST)
தனக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியிருந்த  நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மத்திய இணை அமைச்சர் மேனகா காந்திக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து, "நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருந்தார்.
 
இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள ஜெயலலிதா, "தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றது. எனது நலம் விசாரித்து நீங்கள் அனுப்பிய கடிதத்தின் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
 
உங்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும், உங்களது அனைத்து செயல்களும் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரான மேனகா காந்தி அனுப்பிய கடிதத்துக்கும் ஜெயலலிதா பதில் கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தி பரபரப்பான பணிச் சூழலிலும் தன்னைப் பற்றியும் சிந்தித்ததற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil