Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை எதிர்த்த தீபா: திங்கட்கிழமை முதல் காணவில்லை??

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (12:18 IST)
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை காணவில்லை என்று பெங்களூரைச் சேர்ந்த ஜெயலலிதாவின் தங்கை எனக் கூறிக் கொண்ட சைலஜா மகள் அமிர்தா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 


 
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தீபாதான் தலைமை ஏற்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்துகின்றனர். 
 
இந்நிலையில், தீபாவும் நானே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என போர்க்கொடி தூக்கினார். ஆனால் தற்போது, தீபாவை காணவில்லை என்ற புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த புகாரை பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா பிரபல ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். அமிர்தா கூறியதாவது, தீபாவும் நானும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்து வருகிறோம். என்னுடைய பெரியம்மா (ஜெயலலிதா) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அதிகமான தொடர்பில் இருந்து வந்தோம்.
 
சசிகலா தொடர்பாக தீபா என்னிடம் கருத்துகளைத் தெரிவித்த நிலையில் இருவரும் சந்தித்து இப்பிரச்சனையை குறித்து ஆலோசனை செய்ய முடிவு செய்தோம். இதற்காக சென்னையில் உள்ள தம்முடைய வீட்டுக்கு வருமாறு தீபா என்னை அழைத்தார்.
 
தீபாவின் அழைப்பை ஏற்று சென்னைக்கு திங்கள்கிழமை அன்று வந்தேன். ஆனால் தீபாவின் வீடு பூட்டப்பட்டுள்ளது, அவரது வீட்டு வேலையாட்களும் யாரும் அங்கு இல்லை. திபாவின் செல்போனுக்கும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை.
 
சசிகலாவை விமர்சித்தால் தீபாவிற்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என  அச்சத்தை ஏற்படுத்துகிறது. என்னினும், தீபா பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments