Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரவை முனியம்மாவிற்க்கு அதிமுக சார்பாக ஜெயலலிதா ரூ.6 லட்சம் நிதியுதவி

பரவை முனியம்மாவிற்க்கு அதிமுக சார்பாக ஜெயலலிதா ரூ.6 லட்சம் நிதியுதவி
, சனி, 1 ஆகஸ்ட் 2015 (19:39 IST)
பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா உடல் நிலை குறைவு காரணமாக மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்நிலையில் அவரின் மருத்துவச் செலவுகளை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை ஏற்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
மேலும் இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும், தன் முதுமை காரணமாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள வறுமைச் சூழலை விவரித்து, தன்னை இத்தகைய சூழலில் இருந்து காப்பாற்றி, தனக்கும், தனது குடும்பத்திற்கும் முதல்வர் ஜெயல்லிதா மறு வாழ்வு தருவார் என்று நம்பிக்கை தெரிவித்து பேட்டி அளித்திருந்தார்.
 
இதையடுத்து பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலையையும், இயலாமையையும் உடனடியாகக் கண்ணுற்ற, அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவுகளுக்கென்று மாதந் தோறும் ரூ.6 ஆயிரமும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil