Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டை படகை உப்பு வச்சு அடைச்சாங்களாம்: அமைச்சர் ஜெயக்குமார் பொளேர்!

ஓட்டை படகை உப்பு வச்சு அடைச்சாங்களாம்: அமைச்சர் ஜெயக்குமார் பொளேர்!

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (17:03 IST)
அதிமுகவின் ஓபிஎஸ் அணியை ஓட்டை படகு என அதிமுகவின் எடப்பாடி அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது இரு அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கான சூழல் இல்லை என்பதையே காட்டுகிறது.


 
 
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் குழு அமைத்து சுமூகமாக செல்ல விரும்பினர். ஆனால் பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே ஒரு சில கோரிக்கைகளால் அதில் இழுபறி நீடித்து வந்தது.
 
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியில் உள்ள மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சுத்தமாக இல்லை.
 
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள 15 அமைச்சர்கள், 35 எம்எல்ஏக்கள் எங்கள் அணிக்கு வர தயாராக உள்ளார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
 
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செம்மலையின் இந்த கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ஓட்டை படகை உப்பு வச்சு அடைச்சாங்களாம் என்ற பழமொழி போல் உள்ளது செம்மலையின் கருத்து என்றார். இதில் அவர் ஓபிஎஸ் அணியை ஓட்டை படகு என குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments