எந்த நேரத்திலும் ஆட்சி கலையலாம் என்ற பயம்.. முதல்வரின் கடிதம் குறித்து ஜெயகுமார்..!

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2023 (17:21 IST)
தமிழக முதல்வர்  மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் ரவி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்த 19 பக்க கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். 
 
இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ’இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலை உள்ளது. இந்த ஆட்சி இன்னும் ஒரு சில மாதங்களில் கவிழ்ந்து என்ற எதார்த்த நிலை இருப்பதை முதல்வர் ஸ்டாலின் தெரிந்து கொண்டார். அதனால் தான் அவன் ஆளுநர் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று கூறியுள்ளார். 
 
மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் என யாருமே இந்த ஆட்சியில் திருப்தி இல்லாமல் உள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடுக்கடுக்காக குற்றம் சாட்டி உள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments