Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயகுமாரின் நிதியமைச்சர் பதவிக்கு ஆபத்து?: தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பு வழங்கும் சசி?

ஜெயகுமாரின் நிதியமைச்சர் பதவிக்கு ஆபத்து?: தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பு வழங்கும் சசி?

Webdunia
புதன், 24 மே 2017 (14:51 IST)
தமிழக நிதியமைச்சராகவும், மீன்வளத்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஜெயக்குமார். சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் ஊடகங்களில் அதிகமாக பேட்டி கொடுத்தவர் அமைச்சர் ஜெயக்குமார் தான்.


 
 
ஜெயக்குமாரின் நிதியமைச்சர் பதவியை பறித்து தினகரன், சசிகலா ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வனுக்கு அளிக்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையின் மீது குறிப்பிட்ட அளவிலான எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
 
இவர்களை தவிர மேலும் பல எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை தங்கள் பக்கம் இழுக்க ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் பக்கம் எந்த காரணத்துக்காகவும் எம்எல்ஏக்கள் சென்றுவிடக்கூடாது என நினைக்கும் சசிகலா அதிருப்தியில் உள்ள சில எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி ஓபிஎஸ் அணியின் முயற்சியை முறியடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
முதற்கட்டமாக தங்களுக்கு விசுவாசமாக இருக்கும், அதே நேரத்தில் ஓபிஎஸ்-க்கு எதிராக அவரது சொந்த மாவட்டத்தில் தீயாக வேலை செய்யும் தங்க தமிழ் செல்வனுக்கு அமைச்சர் பதவி வழங்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் நிதியமைச்சர் பதவி. தற்போது நிதியமைச்சராக ஜெயக்குமார் உள்ளது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்னர் சிறையில் உள்ள சசிகலாவை தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு.. 22 ஆண்டுகளுக்கு பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் விடுதலை..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை அறிவிப்பு..!

வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! - முதல்வரின் அதிரடி சட்டத்திருத்தம்! முழு விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments