மேலும் ஒரு வழக்கில் ஜெயக்குமார் கைது! – அதிர்ச்சியில் அதிமுக!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (08:34 IST)
திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 19 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் திமுக தொண்டர் ஒருவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி அரை நிர்வாணமாக அழைத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக கூறி ராயபுரத்தில் முன்னதாக ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியது தொடர்பாக தேர்தல் விதிமுறை மீறல், கொரோனா தொற்று பரவும் வகையில் கூட்டம் கூட்டியது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments