Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறவில்லை: ஜவடேகர் மறுப்பு

Webdunia
புதன், 9 மார்ச் 2016 (19:52 IST)
தேமுதிக கூட்டணி குறித்து, பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசியதாகவும், விஜயகாந்தை முதல் அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதாகவும் தான் கூறியதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


 

 
வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும்,  நேற்று விஜயகாந்த்  பிரேமலாதாவுடன் தொலைபேசியில் கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவும்,  ஜவடேகர் கூறியதாக இன்று காலை செய்தி வெளியானது. மேலும்,  விஜயகாந்தை பாஜக கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியதாக கூறப்பட்டது.
 
ஆனால் அந்த தகவல்கள் அனைத்தையும் ஜவடேகர் மறுத்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த அவர் “ பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசியதாகவும், விஜயகாந்தை முதல் அமைச்சர் வேட்பாளராக ஏற்பதாகவும், நான் கூறியதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானது. 
 
இப்படி செய்தி வெளியிட்ட இணையதளங்கள் மீது புகார் எடுக்கும் படி நான் பத்திரிக்கையாளர் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
 
இன்று காலையிலிருந்து தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சிகள்,  செய்திதாள்கள் மற்றும் இணையதளங்களில் இதுதான் முக்கிய செய்தியாக இருந்தது. இந்நிலையில் ஜவடேகர் இப்படி கூறியிருப்பது, தேமுதிக தொண்டர்கள் மத்தியிலும், தமிழக பாஜக தலைவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

Show comments