Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ஜனவரி 1ஆம் தேதி இறுதி

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2014 (16:43 IST)
2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.
 
நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது. இத்ன்படி, 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால், 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவின்படி பொதுமக்கள் தங்களிடமுள்ள, 2005–ம் ஆண்டுக்கு முன்பாக அச்சிடப்பட்ட 500 ரூபாய், 1,000 ரூபாய் உள்ளிட்ட அனைத்து மதிப்பிலுமான ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நோட்டுக்களை மாற்றுவதற்கான கால இறுதிநாள் வரும் ஜனவரி 1ஆம் தேதியுடன் முடிகிறது.
 
இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.52ஆயிரத்து 855கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்துள்ளது. இதே போன்று, ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் ரூ.73.2 கோடி மதிப்பிலான ரூ.100 நோட்டுகளையும், ரூ.51.85 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகளையும், ரூ.19.61 கோடி மதிப்பிலான ரூ.1,000 நோட்டுகளையும் மாற்றிக்கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை கண்டறிவது எப்படி:
 
ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்கும். இப்படி அச்சிடும் நடைமுறை 2005–ம் ஆண்டுக்கு பின்னர்தான் வந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்காது.

இதை வைத்து 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments