Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 16ஆம் தேதி மாணவர்களுக்கு பள்ளிக்கு வரவேண்டும்: திடீர் உத்தரவால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (20:42 IST)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை என்பது ஜனவரி 14ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று 
 
அதேபோல் வரும் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஜனவரி 16 ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகிஉள்ளது 
 
ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் உரையாற்ற இருப்பதால் அந்த உரையை கேட்க ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்றும், அன்றைய தினம் மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்ட கல்வி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பரபரப்பான செய்தி பரவி வருகிறது. இந்த உத்தரவால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments