Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் யார் என்றே எனக்கு தெரியாது: ஐநா சபை முன்னாள் பொது செயலாளர் டுவீட்

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (08:29 IST)
ஐநாவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் என்பவர் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் முக ஸ்டாலின் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக திமுகவினர் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வந்தனர் 
 
நான் வியந்த உலகத் தலைவர்கள் என்ற புத்தகத்தின் 372வது பக்கத்தில் ஸ்டாலின் குறித்து அவர் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதில் நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர், தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசினார் என்றும், அவரின் நீண்ட கால அரசியல் திட்டங்கள் குறித்த அவரின் பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பு எடுத்து அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன் என்றும், இப்படிப்பட்ட ஒரு தலைவர் மற்ற நாடுகளில் இருந்தால் அவரை உலகமே தூக்கிக் கொண்டு இருக்கும் என்றும் ஜான் எலியாசன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததாக திமுகவினர் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.
 
இது குறித்து ஒரு சிலர் டுவிட்டரில் ஜான் எலியாசன் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு இவ்வாறு நீங்கள் உங்களுடைய புத்தகத்தில் கூறியது உண்மைதானா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அவர் அதற்கு கூறிய பதில் 'ஸ்டாலின் யார் என்றே எனக்கு தெரியாது' என்று டுவிட் செய்துள்ளார். இதனால் திமுகவினர் அப்செட் ஆகி உள்ளனர் 
 
மேலும் அந்த புகைப்படம் போலியானது என்றும் அதில் உள்ள பல விஷயங்கள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து திமுகவினர் போட்டோஷாப் மூலம் இந்த புகைப்படத்தை செய்துள்ளதாக ட்விட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர். முக ஸ்டாலின் தனது தொண்டர்களிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments