இந்திய அளவில் திராவிடத்தின் வாரிசு நான் மட்டுமே: தீபா

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (17:05 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை தனது முகநூலில் பெரியாரின் சிலையை உடைப்பேன் என்று பதிவு செய்த கருத்துக்கு திட்டாத அரசியல்வாதியே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்ப்புக்குரல் ஏற்பட்டதால் பின்வாங்கிய எச்.ராஜா, தனது முகநூல் பதிவை நீக்கிவிட்டார்

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவும் தன்னுடைய முறைக்கு எச்.ராஜாவை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றி விட முடியுமா ? வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர்...சிலையை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாதவை..இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டேன்..என்று கூறியுள்ளார்.

எச்.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரிதான். ஆனால் இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் என்று தீபா கூறியதை எங்களால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இன்று காலையில் இருந்தே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல வேட்டை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments