Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ தீபா போட்ட ஒற்றை சபதம்: டோட்டல் ஷாக்கில் அதிமுகவினர்!!

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (11:48 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை சட்டபடி மீட்பேன் என ஜெ தீபா தெரிவித்துள்ளார். 
 
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா பின்னர் தனது பேரவையை அதிமுகவுடன் இணைப்பதாக தெரிவித்தார். அதன்படி தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்துவிட்டார். 
 
மேலும், தன்னுடைய பேரவையில் உறுப்பினர்களாக இருக்கும் எல்லோரையும் அதிமுகவில் இணைத்துள்ளார். அதிமுகவில் இணையும் உறிப்பினர்ளின் பெரிய லிஸ்ட் ஒன்றை அதிமுக  தலைமையிடம் கொடுக்க இருக்கிறார் தீபா. 
அதோடு, தனக்கு கட்சியில் எந்த பதவியும் தேவையில்லை. நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசியாக இருந்தேன். இனியும் அப்படியே இருப்பேன். அதிமுகவில் தன்னுடைய பேரவை உறுப்பினர்கள், தொண்டர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று கூறினார். 
 
இந்நிலையில், சர்ச்சையை கிளப்பும் விதமாக ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டப்படி மீட்பேன் என்று பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தீபா முழுமையாக கூறியது பின்வருமாறு... 
ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் எங்களின் குடும்ப சொத்து. அது அதிமுக சொத்து கிடையாது. அரசின் சொத்து கிடையாது. அது எங்களுக்கு சொந்தமானது. போயஸ் இல்லத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. போயஸ் இல்லத்தை மீட்டு எடுப்பேன் என கூறியுள்ளார். 
 
தீபாவின் இந்த பேச்சால் அதிமுகவினர் சற்று கலக்கத்தில் உள்ளனர். போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் தீபா இதற்கு முட்டுக்கடையாக இருப்பார் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments