Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பனை மகனே வெட்டுறான்; இதற்கு அரசை குறை சொல்ல முடியாது - குழப்பும் தா.பா.

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (05:43 IST)
அப்பனை மகனே கோர்ட்டு வளாகத்தில் வைத்து வெட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இருப்பினும் இதற்கு மாநில அரசை குறை சொல்ல முடியாது என்று இந்திய கம்யூ கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அறந்தாங்கியில் செய்தியாளர்களிடத்தில் பேசிய தா.பாண்டியன், ”தமிழகத்தில் நாள்தோறும் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. அப்பனை மகனே கோர்ட்டு வளாகத்தில் வைத்து வெட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
 
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலை கொள்ள வைக்கிறது. இருப்பினும் இதற்கு மாநில அரசை குறை சொல்ல முடியாது. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து நான் எதுவும் சொல்லும் அதிகாரம் என்னிடம் இல்லை.
 
துருக்கியில் நடைபெற்ற ராணுவ புரட்சியை மக்களே முறியடித்துள்ளனர். இதேப்போல மக்கள் நல்ல முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் நண்பர் அனுப்பிய பரிசுப்பொருள்.. இளம்பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி..!

2 ஆயிரம் யு.எஸ்.எய்டு ஊழியர்கள் பணிநீக்கம்.. மீதமுள்ளவர்களுக்கு கட்டாய விடுப்பு: டிரம்ப் உத்தரவு..

அமெரிக்கா கொடுத்த ‘தேர்தல் உதவி நிதி’ எங்கே? மத்திய அரசு அளித்த விளக்கம்!

இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள்: சதமடித்த விராத் கோஹ்லிக்கு தமிழக முதல்வர் பாராட்டு..!

உக்ரைனில் அமைதி திரும்பும்னா.. பதவி விலகவும் தயார்! - ட்ரம்ப் கருத்துக்கு ஜெலன்ஸ்கி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments