Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க தமிழ்ச்செல்வனை இணைப்பதா? வேண்டாமா? ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதல்

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (09:06 IST)
தங்க தமிழ்ச்செல்வனை அதிமுக இணைக்க ஈபிஎஸ் குரூப்பும், இணைக்க வேண்டாம் என ஓபிஎஸ் குரூப்பும் காய் நகர்த்தி வருவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தனது மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன், தனக்கும் தனது மகனின் வெற்றிக்கும் செய்த இடைஞ்சல் காரணமாக கடும் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ், தங்க தமிழ்ச்செல்வனை அதிமுக இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறார்.
 
ஆனால் தேனியில் ஓபிஎஸ்க்கு இருக்கும் செல்வாக்கை தகர்க்க தங்க தமிழ்ச்செல்வன் உதவுவார் என்பதால் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுக இணைக்க ஈபிஎஸ் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனாலும் ஓபிஎஸ்க்கு அதிக நெருக்கடி கொடுத்தால் பாஜக மேலிடத்தில் இருந்து அழுத்தம் வர வாய்ப்பு இருப்பதால் ஓபிஎஸ் சம்மதத்துடன் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க ஈபிஎஸ் தரப்பு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் இன்னும் அதிமுகவில் இணைவது குறித்து முடிவெடுக்கவில்லை என்றும், திவாரகனின் கட்சி அல்லது திமுகவுக்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க ஓபிஎஸ் ஒரு நிபந்தனை விதித்திருப்பதாகவும், அவர் அதிமுகவில் இணைந்தால் அவருக்கு மாநில அளவில் என்ன பொறுப்பு வேண்டுமானாலும் கொடுத்து கொள்ளலாம் என்றும் ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுக்க கூடாது என்றும் கூறியுள்ளாராம். இதனையடுத்து தங்கதமிழ்ச்செல்வன் விவகாரத்தில் ஈபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை அதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments