Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணவக்கொலையை நியாயப்படுத்துவது நல்லதில்ல! - கவுண்டம்பாளையம் ரஞ்சித்துக்கு திருமா அட்வைஸ்!

Prasanth Karthick
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (10:32 IST)

சாதி ஆணவக் கொலை குறித்து நடிகரும், இயக்குனருமான ரஞ்சித் சமீபத்தில் பேசிய கருத்துகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90கள் முதலாக படங்களில் நடித்து வருபவர் ரஞ்சித். தற்போது இவரே எழுதி, இயக்கி, நடித்து கவுண்டம்பாளையம் என்ற படத்தை வெளியிட்டார். இந்த படம் தற்போது ஓடிடியிலும் வெளியான நிலையில் பலரும் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

 

சமீபத்தில் ஆணவக்கொலை குறித்து ரஞ்சித் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. “பெற்ற பிள்ளைதான் வாழ்க்கை என நினைத்து வாழும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதே என்று கோபப்படுவதால் ஏற்படுவது அது. இது வன்முறை அல்ல” என பேசியிருந்தார்.

 

இதுகுறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “ஆணவக் கொலையை குற்றமில்லை என்று சொல்வது ஒன்று அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது வணிக நோக்கமாக இருக்க வேண்டும்.

 

அதை வைத்து படம் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான கருத்துகளை பரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல. அவர்கள் இதுபோன்ற கருத்துகளை பரப்புவது கவலை அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments