Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ. மரணத்தை சேனல்கள் தீபாவளி நிகழ்ச்சிக்கு ரெடியாவது போல் ரெடியானது அசிங்கம்

ஜெ. மரணத்தை சேனல்கள் தீபாவளி நிகழ்ச்சிக்கு ரெடியாவது போல் ரெடியானது அசிங்கம்
, செவ்வாய், 6 டிசம்பர் 2016 (01:43 IST)
ஜெயலலிதா மரணம் குறித்து தொலைக்காட்சி சேனல்கள், ஒரு தீபாவளி நிகழ்ச்சிக்கு ரெடியாவது போல் முன் கூட்டியே ரெடியாக இருப்பது அசிங்கமாக இருக்கிறது என்று முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.


 

இது குறித்து ஆர்.பிரபாகர் என்பவர் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளது பின்வருமாறு:

ஜெயலலிதா பற்றி ’அந்த தகவல்’ அறிவிக்கப்பட்டால் போதும். மறுவினாடியில் இருந்து நிகழ்ச்சிகளை தூள்பறத்த சேனல்கள் முழு வீச்சாக தயாராக இருக்கின்றன. ஜெயா டிவி உட்பட!

இன்று 5.30 மணிக்கு அந்த தவறான தகவல் வெளியான அரை மணி நேரத்தில் அம்பலமான மிக முக்கியமான விசயம் இது.

ஜெயலலிதா பற்றிய அறிவிப்பு வந்ததும் எது மாதிரியான காணொளிகள் போட வேண்டும், புகைப்படத் தொகுப்பு போட வேண்டும் என்றெல்லாம் எல்லா தொலைக்காட்சிகளும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கின்றன.

ஜெயலலிதா பற்றிய ஸ்க்ரிப்ட் எழுதப்ப்பட்டிருக்கிறது. அதற்கு வாய்ஸ் ஓவர் ரெக்கார்ட் பண்ணப்பட்டிருக்கிறது. பின்னணி இசை வாசிக்கப் பட்டிருக்கிறது. ஜெயலலிதா காலமானார் என்று கிராஃபிக்ஸ் பண்ணி வைத்திருக்கிறார்கள். இவ்வளவும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

தீபாவளி நிகழ்ச்சிக்குத் தயாராவது போலவே கடந்த சில வாரங்களாக இவர்கள் முழு வீச்சாக ஜெயலலிதாவின் மரணத்திற்கு தயாராகி இருக்கிறார்கள். டிரைலரும் டீசரும் மட்டும்தான் வெளியிடவில்லை.

அதனால்தான் அந்த தவறான தகவல் வெளியிடப்பட்ட அந்த குறைந்த சமயத்திலேயே அந்த காணொளிகள் வெளியிடப்பட்டு விட்டன.

ஜெயலலிதா மரணம் சில வாரங்களாகவே எதிர்பார்ப்பில் இருக்கின்ற ஒன்றுதான். என்றாலும் சேனல்கள் ஒரு தீபாவளி நிகழ்ச்சிக்கு ரெடியாவது போல் முன் கூட்டியே ரெடியாக இருப்பது அசிங்கமாக இருக்கிறது.

ஏன் தகவல் வந்தப் பின் அறைகுறையாக அந்த வேலையை செய்தால் என்ன? கொஞ்சம் திகைத்து நின்றால்தான் என்ன?

அதிமுக கார்கள் பலர் கூட ஃபிளக்ஸ் அடித்து வைத்திருக்கிறார்கள். ஃபோட்டோ பால் மாலை எல்லாம் கூட வாங்கி மன்றங்களில் ரெடியாக வைத்திருக்கிறார்கள். எல்லா விதங்களிலும் ஜெயலலிதா மரணத்தைக் கொண்டாட தயாராக இருந்துகொண்டு.. அம்மா எப்படியும் மீண்டு வருவார். மறுபடியும் முதல்வர் நாற்காளியில் அமர்வார்’ என்று டயலாக் பேசுவது என்ன விசுவாசம்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி