Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயின் தவெக மாநாடு ரத்தா.? வெளியான முக்கிய அப்டேட்.!!

Senthil Velan
வியாழன், 12 செப்டம்பர் 2024 (15:10 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இம்மாதம் நடைபெறுவதாக இருந்த நிலையில்,  அக்டோபர் இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் செப்டம்பர் 23-ம் தேதி நடத்த முடிவு செய்து காவல் துறையிடம் அனுமதி கோரினர்.
 
இதையடுத்து, 21 கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்குமாறு விக்கிரவாண்டி போலீஸார் அறிவுறுத்தினர். பின்னர், காவல் துறை கேட்டிருந்த கேள்விகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கடந்த 6-ம் தேதி பதில் கடிதம் அளித்தார்.
 
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விக்கிரவாண்டி போலீஸார்  33 நிபந்தனைகளுடன் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அனுமதி வழங்கினர். இதனிடையே கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், கடந்த திங்கட்கிழமை விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்த கூட்டத்தில் மாநாடு தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை விதித்துள்ள 33 நிபந்தனைகளை பின்பற்றி, மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால் மாநாட்டை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் இறுதியில் நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: கைதி சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்.! வேலூர் சிறை அதிகாரி புழல் சிறைக்கு மாற்றம்.!!


மேலும் மாநாட்டிற்கான தேதி குறித்து விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது. இதனால் மாநாட்டிற்கான தேதி மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments