கமல் கட்சி வேட்பாளர் டிராபிக் ராமசாமியா?

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (08:16 IST)
வரும் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கமல் ஆதரவுடன் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக நேற்று பரபரப்பான செய்திகள் வெளிவந்தது. ஆனால் ஆர்.கே.நகரில் தான் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் இதுகுறித்து வெளிவரும் செய்திகள் வதந்திகள் என்றும் விஷால் நேற்று அறிவித்தார்

இந்த நிலையில் வாஞ்சி இயக்கத்தின் தலைவர் பி.ராமநாதன், கமல் கட்சி சார்பில் டிராபிக் ராமசாமியை ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நேர்மையான பேச்சிற்கும், செயலுக்கும் கிடைக்கும் மரியாதை இது தான் என்றும் கமல் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக அக்கறை கொண்டவரும், மக்களின் அறிமுகத்தையும் பாராட்டுக்களையும் பெற்றவரான டிராபிக் ராமசாமியை கமல் வேட்பாளராக அறிவித்தால் அரசியல் கட்சிகளுக்கு கடும் சவாலை கொடுப்பார் என்றும் ராமநாதன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். கமல் இந்த கோரிக்கையை பரிசீலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கரூர் செல்லும் தேதி அறிவிப்பு.. என்னென்ன நிபந்தனைகள் விதித்தது காவல்துறை..!

3 பாகிஸ்தான் ராணுவ சாவடிகளை கைப்பற்றிய ஆப்கன்.. 12 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை..!

ஏஐ வருகையால் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை இழப்பு! - நிதி ஆயோக் கணிப்பு!

இனி பள்ளிகளில் ஆன்லைன் முறையில் கட்டண வசூல்? - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

முதல் மனைவிக்கு சொத்தை எழுதி வைத்த கணவன்! கூலிப்படை ஏவிக் கொன்ற இரண்டாவது மனைவி!

அடுத்த கட்டுரையில்
Show comments