சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்பட்டதா?

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (08:30 IST)
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஆரம்பமானதிலிருந்து கேஸ் சிலிண்டருக்கான மானியம் அறிவிக்கப்பட்டு அந்த மானியம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய சிலிண்டர் விலை குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 65 குறைத்து இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.  கடந்த மாதம் ரூ.652.50 விற்கப்பட்ட சிலிண்டர், இந்த மாதம் ரூ.590.50 விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் மானியம், மானியம் இல்லாத சிலிண்டரின் விலை பற்றி இந்தியன் ஆயில் நிறுவனம் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை இந்தியன் ஆயில் நிறுவன இணையத்தில் மானிய சிலிண்டர் விலை பற்றிய அறிவிப்பு இல்லை. மானிய சிலிண்டரின் விலைபற்றி அறிவிப்பு இல்லாததால் இனி மானியம் கிடைக்குமா? என்ற கேள்வி வாடிக்கையாளர் மனதில் எழுந்துள்ளது
 
ஏற்கனவே திமுக தனது தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக சிலிண்டர் விலை குறைக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்த பாஜக, தற்போது அதே கொள்கையை கடைபிடித்து உள்ளதா என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சிலிண்டருக்கு மானியம் உண்டா இல்லையா என்பது குறித்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments