விஜய் கட்சிக்கு அரசியல் ஆலோசகர் ஆகிறாரா ஆதவ் அர்ஜூனா? விரைவில் அறிவிப்பு என தகவல்..!

Mahendran
புதன், 29 ஜனவரி 2025 (15:57 IST)
விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதவ் அர்ஜுனாவின் ஆலோசனை நிறுவனம் அரசியல் ஆலோசனை செய்யும் நிறுவனமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை  விஜய் தொடங்கிய நிலையில் அவரது கட்சிக்கு ஆலோசனை  சொல்லும் நபராக ஜான் ஆரோக்கியசாமி என்பவர் நியமனம் செய்யப்பட்டதாகவும் ஆனால் அவரது செயல்பாடு திருப்தி இல்லை என்று விஜய் வேறு நிறுவனத்தை மாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவல் படி ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனம்தான் விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆலோசனை சொல்ல இருப்பதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே தன்னுடைய நிறுவனத்தின் மூலம் திமுகவிற்காக  ஆலோசனைகள் கூறிய நிலையில் தற்போது விஜய்யின் கட்சிக்கு ஆலோசனை கூற இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments