Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று முதல் சர்வதேச விமான சேவை: முதல் விமானம் அபுதாபிக்கு

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (07:59 IST)
சென்னையில் இன்று முதல் சர்வதேச விமான சேவை
தமிழகம் உள்பட நாடு முழுவதும் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் நேற்று முதல் தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் விமான சேவைகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், நாட்டின் பல பகுதிகளுக்கும் நேற்று விமானம் கிளம்பி சென்றது. இருப்பினும் ஒருசில விமானங்களில் போதுமான பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கிய நிலையில் இன்று முதல் சர்வதேச விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் இருந்து அபுதாபிக்கு இன்று காலை 9.15 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று கிளம்ப இருப்பதாகவும், இதற்கான பயணிகள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
சென்னையிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்துக்கு செல்வதற்கு வசதியாக இருந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்து வந்து ஊரடங்கால் சென்னையில் சிக்கியவர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்கு செல்ல இந்த சர்வதேச விமான சேவையை வாய்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதும், இந்த நடவடிக்கைகளுக்கு பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments