Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவுள்ளதாக தகவல்

Sinoj
சனி, 13 ஜனவரி 2024 (20:34 IST)
உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு மக்கள நலத்திட்டங்கள், மாநில வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு  என  பல அறிவிப்புகள் வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்,  ஜனவரி 7, மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை- நந்தனம்பாக்கத்தில் உள்ள வர்த்தகக் மையத்தில் நேற்று முதல் உலக முதலீட்டாளர்கள்  மாநாடு நடைபெற்றது.

இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடியில் முதலீடு செய்து, அரசுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ளதாக அறிவித்தனர்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  வரும் ஜனவரி 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான குழுவினர் சுவிட்சர்லாந்து செல்லவுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 3 வது ஆண்டாக உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments