Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ நிறுவனம்!!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:07 IST)
திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் தற்போது நேரில் கவுண்டரில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு திருப்பதி முழுவதும் உள்ள தனியார் உணகங்களை முற்றிலும் மூடிவிட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான திட்டம் மூலம் முழுமையாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. வருகிற மார்ச் 29 ஆம் தேதி முதல் திருப்பதிக்கு சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
அந்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சியிலிருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை சென்றடைகிறது. அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறது. இந்த விமான சேவைக்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!

தங்கத்தை விற்க ஏடிஎம் மிஷின்.. 30 நிமிடங்களில் வங்கி அக்கவுண்டில் பணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments