Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 8 ஜூலை 2024 (16:11 IST)
தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 12 வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்வதோடு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை கடலோர பகுதிகளில் காற்று வீசும் என்றும் அதேபோல் கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளிலும் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று முதல் ஜூலை 12ஆம் தேதி வரை தமிழகத்தின்  பரவலாக மழை பெய்யும் என்றும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள கடலில் அலைகள் ஆக்ரோஷமாக  இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
 
அதேபோல் கேரளாவில் ஆலப்புழாம் கண்ணூர்ம் கொல்லம்ம் கோழிக்கோடும் திருச்சூர் ஆகிய பகுதிகளிலும் லட்சத்தீவு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் ஜூலை 12 வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edied by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments