Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

Mahendran
வியாழன், 24 ஏப்ரல் 2025 (14:54 IST)
காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என மத்திய அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் பாகிஸ்தானியரை கண்டறிந்து வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசா மூலம் சென்னை மற்றும் வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக பயணிகள் தொடர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. இவர்கள் தவிர, தொழில் தொடர்பாக மற்றும் திருமண உறவுகளுக்காக இந்தியா வந்துள்ளவர்களும் உள்ளனர். குறிப்பாக டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா பகுதிகளில் பாகிஸ்தானியர்களின் வருகை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது, பாகிஸ்தானியர்கள் எங்கு எவ்வளவு பேர் தங்கியுள்ளார்கள் என்பதற்கான முழு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் காரணங்களைத் தவிர மற்ற நபர்களை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றா நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவ நோக்கில் தங்கி இருப்பவர்களை மனிதநேயம் கொண்ட பார்வையில் பார்க்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்  முற்றிலும் வெளியேற்றப்படுவார்கள் என அரசு உறுதி தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிக்கிற அடியில.. பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாவார்கள்! - பிரதமர் மோடி கர்ஜனை!

இவர் யாருங்க வரி போடுறதுக்கு..? ட்ரம்ப்பை முதுகில் குத்திய அமெரிக்க மாகாணங்கள்! - நீதிமன்றத்தில் வழக்கு

கும்பகோணத்தில் ’கருணாநிதி பல்கலை கழகம்’: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்