Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் கூட போடாமல் ரத்தானது இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 போட்டி.. ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (06:36 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நேற்று டர்பன் நகரில் முதலாவது டி20 போட்டி நடக்க இருந்த நிலையில் இந்த போட்டி டாஸ் கூட போடாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
 
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி விளையாட உள்ளது. முதல் போட்டி நேற்று டர்பன் நகரில் நடக்க இருந்த நிலையில் டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மழை பெய்தது. 
 
மழை நின்றவுடன் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கடைசிவரை மழை விடவில்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. 
 
இதனால் டாஸ் கூட போடாமல் நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி  நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments