Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாநிலங்களில் விரைவில் சைகோவ் டி தடுப்பூசி அறிமுகம்..!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:41 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க மூன்றாவதாக சைகோவ் டி என்ற தடுப்பூசி விரைவில் அறிமுகமாகவுள்ளது.  

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் மூன்றாவதாக சைகோவ் டி என்ற தடுப்பூசி விரைவில் அறிமுகமாகவுள்ளது.  இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக 11.6 லட்சம் டோஸ் சைகோவ் டி தடுப்பூசிகள் விரைவில் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளன. 
 
மேலும் பிகார், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய எழு மாநிலங்களிலும் விரைவில் சைகோவ் டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments