Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி தண்ணீர் வந்தாச்சு: அய்யாக்கண்ணுவை விவசாயம் செய்யக்கோரி மனு

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (13:47 IST)
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையை அடுத்து அங்குள்ள அணைகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ராம. ரவிக்குமார் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,



மண்டை ஓடுகளையும்,எலும்புகளையும் மாலையாக அணிந்து கோவணம் கட்டி விவசாயிகளின் மானத்தை அய்யாகண்ணு தில்லியில் பறக்கவிட்டார். தற்போது காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை அடுத்து அய்யாகண்ணுவை விவசாயம் செய்ய வலி்யுறுத்தியும், அவரது முதலீடாக உள்ள மண்டை ஓடு,எலும்பு ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், மனு கொடுத்தோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments