கர்நாடக அணைகளில் நீர்வரத்து உயர்வு; ஆனா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (10:07 IST)
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளபோதும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து கர்நாடகா ஆரம்பம் முதலே பிரச்சினை செய்து வருகிறது. தமிழக விவசாய பயன்பாட்டிற்காக காவிரி ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்த அளவு தண்ணீரை தராமல் கர்நாடக அரசு இழுத்தடிப்பு செய்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என கன்னட அமைப்புகளும் பந்த் நடத்தி வருகின்றன.

சமீபத்தில் கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி மற்றும் கே.எஸ்.ஆர் அணைகளில் நேற்று 12,300 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 17,200 அடியாக உயர்ந்துள்ளது.

ஆனாலும் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறந்துவிடும் நீரின் அளவை 3,179 கன அடியில் இருந்து 2,592 கன அடியாக குறைத்துள்ளது கர்நாடகா. நீர்வரத்து அதிகரித்துள்ள போதிலும் கர்நாடகா காவிரி ஆற்றில் நீர் திறப்பை குறைப்பது தமிழ்நாடு விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments